கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேருங்கள்... பெற்றோருக்கு அழைப்பு...

கரூர்: அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என்று கரூர் கலெக்டர் ஷோபனா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த நிதியாண்டில் கல்வித்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாணவர்களின் அறிவு கூர்மைக்காக செஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வருவாய் ஈட்டும் குடும்ப தலைவரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி, 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம், காலணிகள் மற்றும் மதிய உணவு திட்டம், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு இனமாக மாணவ, மாணவிகளுக்கு இலவச வண்ண பென்சில்கள், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கணித உபகரண பெட்டி மற்றும் புவியியல் வரைபட நூல், 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி இடைநிற்றலை குறைப்பதற்காக சிறப்பு ஊக்கத் தொகை, 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உலக தரத்திற்கு இணையான கல்வி அறிவை பெற இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.
எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து அரசு திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷோபனா தெரிவித்துள்ளார்.
நன்றி-தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை...

   தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை... >>> தரவிறக்கம் செய...