கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஐஎம்எஸ் அறிமுகப்படுத்தும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்டடி பட்டி

மாணவர்கள், தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும் வகையில், ப்ளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்டடி பட்டி(Study Buddy) என்ற பிரத்யேக அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அறிவார்ந்த வளம் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள இந்த பட்டி, கேட் மற்றும் சிமேட் போன்ற முன்னணி எம்பிஏ நுழைவுத் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை அளிக்கிறது. கல்லூரி வளாகங்களில் மேற்கொள்ளப்படும் பணியாளர் சேர்க்கைக்காக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளின் மாதிரியும் இதில் அடங்கும்.
ஓம்னி - பிரிட்ஜ் சிஸ்டம்ஸ் உருவாக்கியுள்ள இந்த ஸ்டடி பட்டி ஆப், ப்ளாக்பெர்ரி ஆப் வேர்ல்ட் -லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதன் சிறப்பம்சங்கள்
* வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச பதிவிறக்கம்
* டைனமிக் யுஐ ரென்டரிங் - அனைத்து தகவல்களும் சர்வரில் இருந்து உடனுக்குடன் அளிக்கப்படுகிறது.
* ரேண்டம் வினாத்தாள் - கேள்விகள் சர்வரில் இருந்து தோராயமாக எடுக்கப்படுகிறது.
* பிளாக்பெர்ரி மெசஞ்சர் இன்டெக்ரேஷன் - தங்கள் பிளாக்பெர்ரி தொடர்புகளுடன் மாணவர்கள் சாட் செய்யலாம்.
* முந்தைய மட்டங்களில் பெற்ற சதவிகித அடிப்படையில் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
* பேக் எண்ட் கேள்விகள் வடிவமைப்பு மற்றும் ரிபோர்டிங் எஞ்சின்.
"ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு இளைஞர்களிடையே அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த அப்ளிகேஷனை உருவாக்க வேண்டிய உறுதியான அவசியம் ஏற்பட்டுள்ளது. இது மாணவர்கள், தங்களை தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளவும், அவற்றில் தங்களது திறன்களை வெளிப்படுத்துவதற்கும் நிச்சயம் உதவும்" என்று ஐஎம்எஸ் வர்த்தக தலைவர் சரித் நாயர் கூறினார்.
மாணவர்களின் தயார் நிலைக்கு ஏற்றவகையில் பல்வேறு மட்டங்களில் ஸ்டடி பட்டி மாதிரி தேர்வுகளை கொண்டுள்ளது. ஒரு மாணவர் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொள்வதற்கு கடுமையான மட்டங்கள் அடிப்படையில் ஸ்டடி பட்டியின் பின்புலப் பொறியில் உள்ள பல்வேறு வினாக்களில் இருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
முன்பெல்லாம், பணிக்கு செல்பவர்கள்தான்ப்ளாக்பெர்ரி பயன்படுத்துவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றோ மாணவர்களும் பரவலாக ப்ளாக்பெர்ரி பயன்படுத்தும் நிலை வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அறிமுகம்...

  வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் -  QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அ...