கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அண்ணாமலை பல்கலை பிரச்னை: முதல்வருக்கு எம்.எல்.ஏ. மனு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அனைத்து பாடப் பிரிவுகளும், மத்திய, மாநில அரசு தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையத்திற்கு பொருந்தும் வகையில், அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என, சிதம்பரம் தொகுதி, எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பிய மனுவில், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2002ம் துவக்கப்பட்ட 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்துள்ளார்கள். 30 பாடபிரிவுகளில் பட்டம் பெற்றுள்ள மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகளில் ஏராளமான சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
சில பாடப்பிரிவு படித்த மாணவர்களுக்கு மத்திய, மாநில வேலை வாய்ப்பில் உரிய தகுதியில்லை என நிராகரிக்கின்றன. தொடர்ந்து 5 ஆண்டுகள் பல்கலைக்கழக வகுப்புகளில் படித்து தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியும் பல்கலைக் கழகம் அக்கறை எடுக்கவில்லை. பல்கலை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு மாணவர்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாணவ, மாணவிகள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாணவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி எதிர்கால வாழ்வினை பாதுகாக்க வேண்டும்.
மேலும், அனைத்து பாடப்பிரிவுகளும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு அனைத்திற்கும் மத்திய, மாநில அரசுகளின் தேர்வாணையங்கள், ஆசிரியர் தேர்வாணையம் உட்பட அனைத்தும் பொருந்தும் வகையில் உரிய அங்கீகாரத்தை அரசு வழங்கி உத்தரவிட வேண்டும்.
அனைவருக்கும் மூன்றாண்டு இளங்கலை படிப்பிற்கான பணிகளுக்கு செல்வதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கவேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...