கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்லூரிகளில் நுண்கலை மன்றங்கள் செயல்படுவது எப்போது?

கல்லூரி மாணவர்களின் பன்முகத் திறமைகளை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட, நுண்கலை மன்றம் தற்போது பெயரவில் மட்டுமே உள்ளது. இதனால், தனி திறன்களை மேம்படுத்த வாய்ப்பு கிடைக்காமல், மாணவர்கள் உள்ளனர்.
மாணவர்களின் பன்முகத் திறமைகளை வளர்ப்பதற்காக, நுண்கலை மன்றங்களை கல்லூரிகளில் அரசு துவங்கியது. இசை, ஓவியம், நாட்டியம், பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்டவை, இதில் கற்றுத் தரப்படுகின்றன.
பெயரளவில் மட்டுமே: இத்துறைக்கான கட்டணம், கல்லூரி கட்டணத்துடன் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. மன்றத்தின் செயல்பாட்டை கவனிக்கும் வகையில், துறை பேராசிரியர் ஒருவரை, கல்லூரி முதல்வர் நியமிப்பார். ஆனால், மாணவர்களின் பன்முகத் திறமைகளை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட நுண்கலை மன்றங்கள், தற்போது பெயரவில் மட்டுமே உள்ளன.
இதுகுறித்து, பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பாட்டு, பேச்சு, இசை என, பல திறமைகளை கொண்டு இருந்த, நடிகர் டி.ராஜேந்திரன், மிமிக்ரி தாமு, லஷ்மண் ஸ்ருதி உள்ளிட்டோரின் திறமையை வெளிகொண்டு வந்தது, கல்லூரிகள்தான். தற்போது, கல்லூரியில் செயல்படாத நுண்கலை மன்றங்களால், மாணவர்களின் திறமைகள் பஸ்களில் பாட்டாகவும், கவிதையாகவும் வெளிவருகின்றன.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அயல்நாடுகளில், இசை, ஓவியம், நாட்டியம் போன்ற ஏதாவது ஒரு நுண்கலையை கட்டாயம் கற்க வேண்டும். இந்தியாவிலும் நுண்கலைகளை, அடிப்படைக் கல்வியில் கற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், கலைகள் அழியாமல் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிதியுதவி தேவை: இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக செயலர் பிரதாபன் கூறியதாவது: நுண்கலை மன்றத்தை செயல்பட அதிகளவில் நிதியுதவி தேவைப்படுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாகவும், பல கல்லூரிகளில் செயல்படாமல் உள்ளன. ஆடவர் கல்லூரி மாணவர்கள், நுண்கலை மன்ற நிகழ்ச்சிகளில், தங்களின் திறமையை வெளிப்படுத்தும் இடமாக பயன்படுத்தாமல், சண்டை போடும் இடமாக மாற்றினர். இதனால், கல்லூரி முதல்வர் நுண்கலை மன்ற நிகழ்ச்சிகளை நடத்த தயங்குகின்றனர்.
பெண்கள் கல்லூரிகளில் ஓரளவு நுண்கலை மன்றங்கள் செயல்பாடுகள் உள்ளன. நுண்கலை மன்றத்திற்கு என, அரசு யாரையும் நியமிப்பதில்லை. கலை வல்லுனர் ஒருவரை பொறுப்பாளராக நியமித்தால், அவர்கள் மாணவர்கள் கலை ஆர்வத்தை கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சியளித்து ஒரு நல்ல கலைஞராக உருவாக முடியும். இவ்வாறு பிரதாபன் கூறினார்.
ஒழுக்கம் முக்கியம்: கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி கூறுகையில், "மாணவர்களுக்கு முதலில், தனி மனித ஒழுக்கமே முக்கியம். மாணவர்கள் சரியாக நடக்கும் பட்சத்தில், இதுபோன்ற மன்றங்கள் நடத்த, அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...