கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உலகின் உடனடி தேவை: இன்று உலக அமைதி தினம்

அமைதி - இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து. உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் செப்., 21ம் தேதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1981ல் முதன் முதலாக தொடங்கப்பட்ட இத்தினம், உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து, அமைதி நிலவ, ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் கல்வி, விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் போட்டி போடுகின்றன. இந்த போட்டி, ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகின்றன.

பயங்கரவாதம் ஒழிய...: உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது அந்த நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அனைத்து நாடுகளும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஐ.நா., சபை வலியுறுத்துகிறது. மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து நாடுகளும் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒழிய, அமைதியான உலகை உருவாக்க முடியாது. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டவர்களை பாராட்டும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் ஐ.நா., வின் அமைதி பரிசு ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...