கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மேலாண்மைப் படிப்புக்கான CAT தேர்வுக்கு மீண்டும் மவுசு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.எம்.எம்) உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான CAT தேர்வை எழுத இந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இது கடந்த 2 கல்வியாண்டுகளை விட அதிகம் என்பதால், மாணவ, மாணவிகள் மத்தியில் மேலாண்மைப் படிப்புக்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான CAT தேர்வை கோழிக்கோடு ஐ.ஐ.எம். நடத்துகிறது.
கடந்த 2010ம் ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரம் பேரும், 2011ம் ஆண்டு 2 லட்சத்து 5 ஆயிரம் பேரும் CAT தேர்வை எழுதினர். இந்த எண்ணிக்கை கடந்த 2009ம் ஆண்டு 2 லட்சத்து 42 ஆயிரமாகவும், 2008ம் ஆண்டு 2 லட்சத்து 76 ஆயிரமாகவும் இருந்தது.
கடந்த 2008க்குப் பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக CAT தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது உலகளவில் பொருளாதாரம் முன்னேற்றமடையத் தொடங்கியுள்ள நிலையில், CAT தேர்வை எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவ, மாணவிகள், 2 ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் போது, அவர்களுக்கு பல சர்வதேச நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் CAT தேர்வு நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 13 ஐ.ஐ.எம்.-கள் மற்றும் 150க்கும் அதிகமான தனியார் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில், மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவ, மாணவிகளின் தகுதியை இந்தத் தேர்வுதான் நிர்ணயிக்கப் போகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டும், 2 பகுதிகளாக CAT தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ள ஒருங்கிணைப்பாளர் குமார், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக கூறினார். இதில் 2 பகுதிகளாக நடைபெறும் தேர்வுக்கு, தலா 70 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் தலா 30 கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு...

தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167...