கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இரண்டாம் பருவ பாடப்புத்தகத்துக்கு தட்டுப்பாடு:தனியார், மெட்ரிக் பள்ளிகளில் தவிப்பு

சமச்சீர் கல்வியில் இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள் துவங்கி, ஒரு மாதம் ஆகும் நிலையில், தனியார் பள்ளிகளில் இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு பருவத்துக்கும் பாடப்புத்தகம் வழங்குவதில் ஏற்படும் தாமதம், பெற்றோரை அதிருப்தியடைய செய்துள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியில் முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாடப்புத்தகம் மூன்று பருவத்துக்கு பிரிக்கப்பட்டு, தனித்தனியே தயாரிக்கப்பட்டது.அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கும் இலவச பாடப்புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி, பள்ளி வகுப்பு துவங்கும் போதே வழங்கப்பட்டுவிடுகிறது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் முதல்பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்க, ஒரு மாதத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முதல்பருவத்துக்கான தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள், அக்டோபர் 4ம் தேதி முதல் துவங்கியது. அரசு பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், இதுவரையும் வழங்கப்படவில்லை. புத்தகங்கள் இல்லாமலேயே பாடம் நடத்தப்படுவதால், மாணவர்கள் வீட்டில், "ரிவிஷன்' செய்யவோ, ஹோம்வொர்க் செய்யவோ கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:தமிழ் வழி பாடநூல்களை தேவையான அளவுக்கு முன்கூட்டியே உற்பத்தி செய்யும் தமிழக அரசு, ஆங்கில வழிக்கல்விக்கான புத்தகங்களை உற்பத்தி செய்வதில் தாமதம் காட்டுகிறது. சமச்சீர் புத்தகத்துக்காக பல முறை அலையவேண்டியுள்ளது. ஒரு சில பாடப்புத்தகங்கள் "ஸ்டாக்' இல்லை என்பதால், மற்ற மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்க முடியாத நிலை உள்ளது.சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததாலேயே பல பள்ளிகள் தனியார் பாடப்புத்தகங்களை வாங்கி கொடுத்துவிடுகின்றனர். சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமானதாகவே இருப்பதால், அதை வாங்கி கொடுக்கலாம் என நினைக்கும் பள்ளிகள் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன. தனியார் பள்ளிகளுக்கும் உரிய காலகட்டத்துக்குள் புத்தகங்களை வழங்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

   2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்... Academic Year 2023-2024 - Details of School Working Days... >>> தரவிறக்கம...