கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தமிழகத்தில் அரசு பஸ்களில் கூரியர் சேவை விரைவில் துவக்கம்

 
தமிழக அரசு, விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில், தனியார் மூலம் கூரியர் சேவை துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் எண்ணிக்கை, 905ல் இருந்து, 1,761 ஆக அதிகரித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், ஒரு நகரத்தில் இருந்து, மற்றொரு நகருக்கு அனுப்படும் கவர்களுக்கு, டிரைவர், கண்டக்டர்களே குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து வந்தனர். அது மட்டுமின்றி, பஸ்களில் அனுப்பப்படும் பூக்கள் உள்ளிட்ட, பார்சலுக்கும் லக்கேஜ் கட்டணம் வசூல் செய்து வந்தனர்.அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில், பஸ்களில் பார்சல், கூரியர் தபால் அனுப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை, வி.ஸ்பீடு லாகிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக, அந்த நிறுவனம், விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு குறிப்பிட்ட தொகையை டிபாசிட்டாக செலுத்தி உள்ளது. அது மட்டுமின்றி, பஸ்களில் அனுப்பப்படும் பார்சலின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் அந்நிறுவனம் விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, வி.ஸ்பீடு லாகிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், சேலம், சென்னை கோயம்பேடு, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகர, பஸ் நிலையங்களில் செயல்படும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக, டிக்கெட் புக்கிங் சென்டர்களின் அருகில், கூரியர் புக்கிங் சென்டர்களை அமைத்து வருகிறது.கூரியர் தபால்களை விரைந்து சப்ளை செய்யும் வகையில், அனைத்து நகரங்களிலும் தலைமை அலுவலகத்தை துவக்கி உள்ளது.

இது குறித்து கூரியர் நிறுவன மண்டல மேலாளர் ஒருவர் கூறியதாவது:அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் மூலம், கூரியர் சேவையை துவக்கி உள்ளோம். ஒரு நகரத்தில் இருந்து, மற்றொரு நகரத்துக்கு அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும், பஸ் நிலையங்களிலேயே இறக்கப்படும்.அதன் பின், அந்த பார்சல்களை மற்றொரு வாகனத்தின் மூலம், எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று பட்டுவாடா செய்வோம்.எங்கள் நிறுவனத்தை பொறுத்த வரை, காலையில் புக்கிங் செய்தால், அன்று மாலையிலேயே பார்சல்கள் கொண்டு சேர்க்கப்படும் வகையில், தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.இந்நிறுவனத்தில் பார்சலுக்கான கட்டணம் பிற நிறுவனங்களை விட, 40 முதல், 50 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.இவ்வாறு மண்டல மேலாளர் கூறினார்.

விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஒருவர் கூறியதாவது:விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்க, பார்சல், கூரியர் சேவை துவக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், அனைத்து பார்சல்களும் பஸ்சின் மேல்பகுதியிலும், வண்டியின் பின்புறம் உள்ள டிக்கியில் மட்டுமே ஏற்ற வேண்டும், என்ற நிபந்தனையுடன் தான், பார்சல் சேவையை அனுமதித்துள்ளோம்.இவ்வாறு கிளை மேலாளர் கூறினார்.

இந்த சேவையால் பஸ்களில் பார்சல்களை ஏற்றுவது, இறக்குவது போன்ற பணிகளால், காலதாமதம் ஏற்படும். அதனால், பயண நேரம் அதிகரிக்கும் என்றும், குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை கொண்டு சேர்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...