கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜி.ஆர்.இ தேர்வின் நுணுக்கங்களை அறியுங்கள்

ஜி.ஆர்.இ. தேர்வானது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாக இருப்பதால், அதில் தேர்ச்சிபெற ஏராளமானோர் முயலும் நிலையில், தேர்வைப் பற்றி அடிக்கடி எழும் பலவிதமான கேள்விகளும், அதற்கான பதில்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஜி.ஆர்.இ ரிவைஸ்டு ஜெனரல் டெஸ்ட் என்றால் என்ன?
இளநிலை அளவிலான ஒரு பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு, ஒரு மாணவர் எந்தளவிற்கு தயாராகவும், தகுதியாகவும் உள்ளார் என்பதை அளவிடுவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்களில் சேர, உங்களுக்கான அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஒரு தேர்வாகும் இது.
உலகெங்கிலும், முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கிவரும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள், GRE Revised General Test  மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் 1000க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள், தங்களின் MBA மற்றும் பிறவகை வணிகப் படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள இத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுகின்றன.
முதுநிலைப் பட்டப் படிப்பை ஒரு மாணவர் வெற்றிகரமாக முடிப்பதற்கான திறன்கள் இருக்கிறதா என்பதை இந்த GRE Revised General Test சோதிக்கிறது. Verbal reasoning, Quantitative reasoning, Critical thinking, Analytical writing போன்ற அம்சங்கள் அவற்றில் அடங்கும்.

2. தேர்வு முறை எவ்வாறு இருக்கும்?
இத்தேர்வில், மொத்தம் 3 பிரிவுகள் இருக்கும். Verbal reasoning, Quantitative reasoning, Analytical writing போன்றவையே அப்பிரிவுகள். முதல் பகுதியான Verbal reasoning, உங்களின் எழுத்துத் திறன், அதில் அடங்கிய தகவல்கள், கருத்துக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்கிறது.
Quantitative reasoning என்ற 2ம் பகுதியானது, பிரச்சினை தீர்க்கும் திறன், அரித்மேடிக்கின் அடிப்படை விதிகள், அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி மற்றும் டேட்டா அனலிசிஸ் போன்ற திறன்களை ஆராய்கிறது.
Analytical writing  என்ற 3ம் பகுதியானது, ஒருவரின் நுணுக்கமான சிந்தனை, பகுப்பாய்ந்து எழுதும் திறன், பலதரப்பட்ட எண்ணங்களை அவர் எவ்வாறு சிறந்த முறையில் தொகுத்து எழுதுகிறார் என்பதை ஆராய்வதாக இருக்கிறது.
3. இத்தேர்வை யாரெல்லாம் எழுதுகிறார்கள்? இதற்கு ஏதேனும் வயது வரம்பு உள்ளதா?
உலகெங்கிலுமுள்ள திறனுள்ள இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் வணிகப் பள்ளிகளில் சேர விரும்புபவர்கள், இந்த GRE Revised General Test -ஐ எழுதுகிறார்கள். பலதரப்பட்ட கல்வி மற்றும் கலாச்சாரப் பின்னணிகளிலிருந்து வருபவர்களின் தகுதித் திறன்கள் பற்றி அளவிடுகிறது. சேர்க்கை மற்றும் உதவித்தொகை கமிட்டிகள், ஒருவரின் முதுநிலை சேர்க்கை மற்றும் உதவித்தொகை சலுகையை உறுதிசெய்ய, இத்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்கின்றன.
வெளிநாடுகளில், முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் யார் வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம். இதற்கான வயது வரம்பு என்று எதுவுமில்லை.
4. இத்தேர்வை எப்போது, எப்படி எழுதலாம்?
இது ஒரு கணினி அடிப்படையிலான தேர்வு. தேர்வையெழுத, ஒருவர் தேர்ந்தெடுக்கும் இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து வாய்ப்பு அமைகிறது. இந்தியாவில், 10 நகரங்களில், இத்தேர்வை ETS நடத்துகிறது.
5. இத்தேர்வு மதிப்பெண்கள் எத்தனை ஆண்டுகள் செல்லும்?
மொத்தம் 5 ஆண்டுகள் வரை, இத்தேர்வு மதிப்பெண்கள் செல்லத்தக்கதாக இருக்கும்.
6. தேர்வு கட்டணம் மாறிவிட்டதா? இத்தேர்வுக்கு எவ்வளவு செலவாகும்?
கடந்த ஜுலை 1, 2012 முதல், உலகில் எந்தப் பகுதியிலிருந்தும் இத்தேர்வை எழுதுபவர்களுக்கு, ஒரே கட்டணம் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டணமாக, 175 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் இத்தேர்வுக்கான கட்டணம் குறைந்துள்ளது.
7. இத்தேர்வை, ஒருவர் எத்தனை முறை எழுதலாம்?
ஒவ்வொரு 30 நாட்களுக்கும், இத்தேர்வை எழுதலாம். 1 வருடத்திற்கு அதிகபட்சம் 5 தடவைகள் இத்தேர்வை எழுதலாம்.
8. இத்தேர்வை எழுத, ஏதேனும் இலவச பயிற்சி திட்டங்கள் உள்ளனவா?
ஆம். GRE இணையதளம் சென்று, அங்கே இலவசமாக கிடைக்கும் Tools -ஐ பெறலாம். POWERPREP II software என்பது அதில் ஒன்று. சமீபத்தில் வெளியான மென்பொருளினுடைய, version 2.0 -ல், இரண்டு முழு நீள பயிற்சி தேர்வுகள், வியூகங்கள், மாதிரி கேள்விகள் மற்றும் இன்னும் பிற அம்சங்கள் உள்ளன.
மேலும், இலவச கணித திறனாய்வு மற்றும் குறைந்த விலையிலான தேர்வு தயாராதல் உபகரணம் போன்றவைகளையும், GRE Programme, மாணவர்களின் நலனுக்காக வழங்குகிறது.
9. இத்தேர்வில் வெற்றிபெற எத்தனை நாட்கள் பயிற்சி பெற வேண்டியிருக்கும்? எந்தவகையான புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கும்?
நபரைப் பொறுத்து, படிக்கும் காலஅளவு மாறுபடும். GRE Programme -ல், பல குறைந்த விலையிலான உபகரணங்கள் கிடைக்கிறது என்பதை முன்னரே பார்த்தோம். The official guide to GRE Revised general test என்ற புத்தகத்தின் 2ம் பாகம் பயனுள்ள ஒன்று.
10. GRE Programme வழங்கும், தேர்வுக்கு தயாராவதற்கான வேறு ஏதேனும் புதிய உபகரணங்கள் உள்ளனவா?
GRE Success starter - The test maker&'s guide to doing your best என்ற புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒருவர், www.ets.org/gre/store என்ற இணையதளத்தில், 7 அமெரிக்க டாலர் விலையில், அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
11. சேர்க்கைப் பெறுவதற்கான சரியான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
GRE Search Service database -ல் ஒருவர், தனது பெயரை இலவசமாக இணைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் பொருத்தமான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் உதவியைப் பெறலாம்.
12. GMAT -ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? அந்த மாற்றங்களை, GRE Revised Test மாற்றங்களுடன் ஒப்பிடலாமா?
GMAT தேர்வு மாற்றங்கள் பற்றி இங்கே விவாதிப்பது சரியாக இருக்காது. ஆனால், இந்த 2 தேர்வுகளுமே, verbal reasoning, quantitative reasoning, critical thinking, analytical writing skills போன்ற அம்சங்களைத்தான் அளவிடுகின்றன. GRE Revised General Test -ல், ScoreSelect -ல், ஒருவர், நடப்பு தேர்வு நிர்வாகத்திலிருந்து மதிப்பெண்களை அனுப்ப முடியும். அதேபோல், கடந்த 5 வருடங்களின் மதிப்பெண்களையும் செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...

  *💫EMIS-III TERM MARK ENTRY... *📝மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை... ...