கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டிசம்பர் 26 [December 26]....

நிகழ்வுகள்

  • 1776 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியர் நியூ ஜெர்சியில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
  • 1792 - பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.
  • 1793 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.
  • 1811 - வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம்ஸ்மித் இறந்தார்.
  • 1825 - முதலாம் நிக்கலாஸ் மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய இராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.
  • 1862 - ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1870 - ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
  • 1882 - யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை உண்டுபண்ணின.
  • 1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1925 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  • 1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது.
  • 1944 - ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் ஜேர்மனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
  • 1948 - கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது.
  • 1973 - சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
  • 1974 - சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
  • 1976 - நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.
  • 1979 - சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.
  • 1985 - கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபொசி கொல்லப்பட்டார்.
  • 1986 - உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது (www.ibiblio.org).
  • 1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
  • 1998 - அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.
  • 2003 - தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
  • 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.
  • 2006 - சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

பிறப்புகள்

  • 1791 - சார்ள்ஸ் பாபேஜ், ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1871)
  • 1880 - எல்ரன் மாயோ, ஆஸ்திரேலிய உளவியலாளர் (இ. 1949)
  • 1893 - மா சே துங் சீன மக்கள் குடியரசின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (இ. 1976)

இறப்புகள்

  • 1530 - ஸாகிருதீன் பாபர், இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் (பி. 1483)
  • 1972 - ஹரி ட்ரூமன், 33வது அமெரிக்காவின் 33வது அதிபர் (பி. 1884)
  • 1999 - சங்கர் தயாள் சர்மா, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1918)
  • 2006 - ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அதிபர் (பி. 1913)

சிறப்பு நாள்

  • பொதுநலவாய நாடுகள் - பொக்சிங் நாள்
  • கேரளா - சபரிமலையில் மண்டல பூஜை
  • குவான்சா - முதல் நாள் விழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...