கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அண்ணாமலை பல்கலையில் உலகத் தமிழ் இணைய மாநாடு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு, டிசம்பர் 28,29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. பல்கலையிலுள்ள சாஸ்திரி அனெக்ஸர் ஹாலில் இம்மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில், பல்வேறான தலைப்புகளில், பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இம்மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் சுமார் 40 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அரங்கிலும், தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள், தங்களின் மென்பொருளை கணினியில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெளிவாக விளக்குவார்கள். சென்னை, புனே மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களிலுள்ள மென்பொருள் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
இக்கண்காட்சியில், பல்வேறு பயன்பாடுகளுக்கான மென்பொருட்கள், காட்சிக்கும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. தமிழ் பாண்ட்ஸ், தமிழ் விசைப்பலகை, மல்டிமீடியா சி.டி.,க்கள், குழந்தைகளுக்கான சி.டி, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை கற்பிக்கும் சி.டி.,க்கள், செல்போன் மற்றும் டேப்லெட் போன்ற நவீன கருவிகளில் தமிழைப் பயன்படுத்தும் மென்பொருட்கள், பிரின்டிங் மற்றும் டிசைனிங் நிறுவனங்களுக்கு தேவைப்படும் மென்பொருட்கள், போன்ற பலவாறானவை, காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட, தமிழ் யூனிகோட், டேஸ்16 குறியீட்டில் அழகிய வடிவில் 8 எழுத்துருக்கள் மற்றும் தமிழ் 99, தட்டச்சு விசைப்பலகை மென்பொருட்கள், அத்துடன் 32 பக்க பயன்பாட்டு கையேடு தமிழில் ரூ.50க்கு கிடைக்கும்.
இக்கண்காட்சி அரங்கில், மக்கள் கூடம் நடைபெறுகிறது. இதில், கணித்தமிழ் நுட்பங்களை, துறை வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்தி பயிற்றுவித்தல், கணினி வழியாக கற்கும், கற்பிக்கும் முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
கண்காட்சியானது, காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறும். அனுமதி இலவசம். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...