கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜனவரி 27 [January 27]....

நிகழ்வுகள்

  • 1695 - ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னனானான்.
  • 1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.
  • 1915 - ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
  • 1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  • 1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
  • 1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
  • 1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
  • 1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
  • 1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
  • 1996 - நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
  • 2002 - நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1756 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)
  • 1775 - பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1854)
  • 1832 - லூயிஸ் கரோல், ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1898)
  • 1903 - ஜோன் எக்கில்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (இ. 1997)
  • 1936 - சாமுவேல் டிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
  • 1944 - மைரேயட் கொரிகன், நோபல் பரிசு பெற்றவர்

இறப்புகள்

  • 1814 - ஜொகான் ஃபிக்டே, ஜேர்மனிய மெய்யியல் அறிஞர் (பி. 1762)
  • 1967 - அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்:
    • எட்வர்ட் வைட், (பி. 1930)
    • வேர்ஜில் கிறிசம், (பி. 1926)
    • றொஜர் காபி, (பி. 1935),

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

   2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்... Academic Year 2023-2024 - Details of School Working Days... >>> தரவிறக்கம...