கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தேடித் தீர்ப்போம் !

சூஃபி ஞானி முல்லா நசுருத்தீனிடம் ஒருவர் வந்து, ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி, ''இந்த ஊருக்குச் செல்ல எத்தனை நாட்கள் ஆகும்'' என்று கேட்டார்.

முல்லாவோ ''அது உங்களைப் பொறுத்தது'' என்றார். ''இதென்ன பதில்? நேரடியாக நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் என்று சொல்ல மாட்டீரா? என்னைப் பொறுத்தது என்றால் எனக்குப் புரியவில்லையே'' என்றார்.

முல்லா சொன்னார்: ''அந்த ஊரைக் கடந்து வந்து விட்டீர்கள்... அது உமக்குப் பின்னால் இருக்கிறது. நீர் திரும்பினால் விரைவிலேயே போகலாம். இப்போது நின்றபடியான திசையில் பயணத்தைத் தொடர்ந்தால், உலகையே சுற்றிக் கொண்டு நீர் வந்து சேர வேண்டும். திரும்பி பயணிக்கும் எண்ணம் உமக்கு உண்டா என்று எனக்கு எப்படித் தெரியும். அதனால்தான் அது உம்மைப் பொறுத்தது என்றேன்...''

நம்மில் எத்தனை பேர் திரும்பிப் பார்க்கத் தயாராக இருக்கிறோம்..? நமது துக்கங்கள், துயரங்கள் எல்லாமே உள்ளிருந்து புறப்பட்டவை. ஆனால் அவற்றைத் தீர்க்கும் வழியை மட்டும் நாம் வெளியில் தேடுகிறோம். கவலையை மறக்க, நம்மை நாமே ஏமாற்ற ஆயிரம் உபாயங்களை மேற்கொள்கிறோம்.

ஹோட்டல், சினிமா தியேட்டர், மதுபான கேளிக்கை, நாடகம், தொலைக்காட்சி... இவை எல்லாம் கவலையை மறக்க நாம் வெளியில் தேடும் உபாயங்களே!

பயணம் என்பது, உலகைச் சுற்றிக் கொண்டு ஊர் போகும் முயற்சி. கொஞ்சம் திரும்பி உள்முகமாகப் பயணப்பட்டால், வெகு சமீபத்தில் இருக்கிறது ஊர். அந்த உள்முகப் பயணத்தின் பெயர்தான் தியானம். எத்தனையோ ஞானிகள் தியானத்தின் மூலமாகத்தான் தங்கள் துன்பங்களை வென்றனர்.

புத்தர், தமது மேலாடையில் நிறைய முடிச்சுகளைப் போட்டார். முடிவில் துணியே முடிச்சுகளின் மூட்டையானது. இவற்றை எப்படிப் பிரிப்பது... சீடர்கள் திணறினார்கள்.

புத்தர் 'கடைசியாகப் போட்ட முடிச்சை முதலில் அவிழ்க்க வேண்டும்' என்று கூறி முடிச்சுகளை அவிழ்த்தார். 'நான் போட்ட முடிச்சுகளை நீங்கள் பிரிப்பது கஷ்டம். நானே பிரிப்பது சுலபம். இப்படியே உங்கள் மனத்தில் விழுந்த முடிச்சுகளை நீங்களே அவிழ்ப்பது சுலபம். பிறர் பிரித்துத் தரவேண்டும் என எதிர்பார்ப்பது பலவீனம்' என்றார்.

இன்று பலரும் தங்கள் கஷ்டங்களை எவரேனும் தீர்க்க மாட்டார்களா என்று தவிக்கின்றனர். ஆனால், இவை நம்மால், நம்மில் உண்டானவை... எனவே நாம்தான் அவற்றை தீர்க்க முடியும்! தீர்ப்போம் !

( சக்தி விகடன் - ’ஆனந்தம் பரமானந்தம்’ தொடரில் சுகி. சிவம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சிக்கான அறிவுரைகள் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/ மாவட்டத் தேர்தல் அலுவலரின் அறிவிப்பு, நாள்: 27-03-2024...

   வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சிக்கான அறிவுரைகள் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/ மாவட்டத் தேர்தல் அலுவலரின் அறிவிப்பு...