கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தாமஸ் ஆல்வா எடிசன்...

 
எடிசன் மின்சார பல்பிற்கு காப்புரிமை பெற்ற நாள். உண்மையில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார். உள்நாட்டு போர் நடந்தபொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார்.

ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்தபொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும் பொருள் சிக்கவில்லை, "நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன்; பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது என கற்றுக்கொண்டேன் என்றார்.

எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார். அதை சாதித்தபொழுது நள்ளிரவு. மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது, "நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு; கண்ணு கூசுது விளக்கை அணையுங்க!" என்றார். அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால்தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்; அமெரிக்காவில் விளக்குகள் சில நிமிடம் அணைந்தன. ரேடியோ கரகரத்தது, "எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது!" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது, "எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது!" அவரின் பிறந்த நாள் இன்று (ஜன.27).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...