கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்...

 
 நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1938-ம் வருடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பதவி ஏற்றபோது, அவரது வயது 41. வயதானவர்கள் மட்டுமே வகித்த பதவிக்கு இளவயதில் நேதாஜி தேர்வு செய்யப்பட்டதும், தொண்டர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ‘பேச்சுவார்த்தை இனி செல்லுபடி ஆகாது. மக்களை ஒன்று சேர்த்துப் போராடுவோம்; வெள்ளையரை விரட்டுவோம். சுதந்திரம் மட்டுமே நம் ஒரே குறிக்கோள்!' என தீவிரமாக சுபாஷ் இறங்கினார். ஆனால், அவரது அதிரடி நடவடிக்கைக்கு ஒத்துழைக்க, கட்சியின் மற்ற தலைவர்கள் தயாராக இல்லை.

ஏதேதோ கனவுகளுடன் பதவிக்கு வந்த நேதாஜி, தன் கைகள் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தார். இந்தப் பதவி பரிசு அல்ல... விலங்கு எனப் புரிந்து, பதவியை ராஜினாமா செய்தார். ‘‘பதவியில் இருந்து சாதிப்பதுதான் புத்திசாலித்தனம். இனி மக்களை எப்படித் திரட்டமுடியும்? நீங்கள் தோற்று விட்டீர்கள்’’ என நெருங்கியவர்களே குறைப்பட்டுக்கொண்டார்கள். ‘‘இல்லை. காங்கிரஸ் தலைவர் பதவி இல்லாமலே என்னால் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தர முடியும். இது எனக்கு ஒரு பின்னடைவு மட்டுமே; தோல்வி அல்ல! நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை!’’ என்றார் நேதாஜி. ஆம், சுவாமி விவேகானந்தரின் இந்த வேதவாக்குதான், நேதாஜியின் தாரக மந்திரம்.

1897&ம் வருடம் கட்டாக் நகரில் பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். மெட்ரிக் குலேஷன் தேர்வில், மாநிலத்திலேயே இரண்டாவது மாணவனாகத் தேறினார். பின், தந்தையின் ஆசைக்காக லண்டனில் ஐ.சி.எஸ். தேர்வு எழுதி பாஸானார். ஆங்கிலேயரிடம் அடிமை வேலை பார்க்க விரும்பாமல், ஐ.சி.எஸ். பதவியைத் தூக்கி எறிந்த முதல் இந்தியர் நேதாஜிதான். காங்கிரஸின் மிதவாதக் கொள்கைகள் பிடிக்காமல், தீவிர கருத்து உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ‘ஸ்வராஜ் கட்சி’ தொடங்கியபோது, அதை வளர்ப்பதற்காக ‘ஃபார்வர்ட்’ என்ற நாளிதழை தொடங்கி னார் நேதாஜி. இந்தக் கட்சி கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெறவே, 25 வயதில் நகரசபை கமிஷனர் ஆனார் சுபாஷ். மக்களிடையே சுபாஷ் செல்வாக்கு உயர்வதை விரும்பாத ஆங்கிலேய அரசு, காரணமின்றி அவரை அடிக்கடி சிறையில் தள்ளியது. அவரது உடல்நிலை மிக மோசமாகவே, இந்தியாவில் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியது. 1937&ம் வருடம் தடை நீங்கிய பின்னரே சுபாஷ் இந்தியா வந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆனார். மீண்டும் சிறைப்பட்டபோதுதான், இரண்டாம் உலகப்போரை இந்திய விடுதலைக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்தேசத்தில், சிறையில் இருந்து தப்பி, ராணுவப் போருக்குத் தயாரானார்.

1944&ம் வருடம். இந்திய எல்லையில் சுமார் 2 லட்சம் ஜப்பானியரும், இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 6,000 இந்தியர்களும் ஆங்கிலேயருடன் போரிட்டார்கள். எதிர்பாராத பெரும் மழையால், சேறும் சகதியுமாக இருந்தது போர்க்களம். ஆங்கிலேயர்கள் நவீன கருவிகளுடன் போரிட்டுக்கொண்டு இருக்க வயர்லெஸ், ஜீப், மோட்டார் சைக்கிள், டெலஸ்கோப் போன்ற எந்த சாதனங்களும் இல்லாமல், உணவும், மருத்துவ வசதிகளும் இல்லாமல் இந்தியப் படை போரிட்டது. அமெரிக்க விமானப் படை ஜப்பானியர்களை மொத்தமாகக் கொன்று போட்டது. உடனே, ஜப்பான் பிரதமர் போரை நிறுத்திவிட்டு, மிச்சமுள்ள தன் வீரர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டார்.

எலும்பும் தோலுமாகத் திரும்பிய இந்திய வீரர்களைக் கண்டு ரத்தக்கண்ணீர் வடித்தார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தைத் தொடங்கிய பியூஜிவாரா, ‘‘நாம் தோற்று விட்டோம். இந்தத் தோல்வியில் இருந்து நம்மால் மீளவே முடியாது’’ என்று கதறினார். அப்போதும் உறுதியுடன், ‘‘நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை!’’ என்றார் நேதாஜி. நடந்தவற்றைக் கண்டு மனம் தளராமல், ரஷ்யாவின் ஆதரவைப் பெற விமானம் ஏறினார்.

மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும், அதனை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்ளாமல், நம்பிக்கை யோடு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கியதால்தான், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இன்றளவும் இருக்கிறார் நேதாஜி!

// இன்று - ஜன.23. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள். //

''அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்!''

இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நெகிழ்ச்சியாகச் சொன்னார். காரணம், நேதாஜியின் 'ஜான்சி ராணி பெண்கள் படை’ கேப்டனாக இருந்த லட்சுமி ஷேகல் உட்பட தமிழ்நாட்டில் இருந்து பலரும் நேதாஜியின் படையில் சிறப்பாகப் பணியாற்றினார்கள்.

நேதாஜி... ஒரிசாவின் கட்டாக் நகரில் பிறந்த சுபாஷ் சந்திரபோஸ், இளம் வயதிலேயே அடிமைத்தனத்தை எதிர்க்கிற குணம்கொண்டவராக இருந்தார். கல்லூரி படிக்கும்போதே இந்தியர்களை அவமானப்படுத்தும் வார்த்தைகளைச் சொன்ன ஆங்கிலேய பேராசிரியருக்கு எதிராகக் குரல் கொடுத்து, சிறைக்குச் சென்றார். ஐ.சி.எஸ். (இன்றைய ஐ,ஏ.எஸ்.) தேர்வில் தேறிய பின்பும், ஆங்கிலேயே அரசிடம் வேலை செய்ய விரும்பவில்லை. சித்தரஞ்சன் தாஸ் கொல்கத்தா மேயராக ஆனபோது, தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்று, பல்வேறு அற்புதமான நிர்வாகப் பணிகளை திறம்பட செய்தார். 'ஆயுதங்களின் மூலமே ஆங்கிலேயருக்குப் பாடம் புகட்ட முடியும்’ என வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போரில் கைதிகளான இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை நிறுவினார். அதில் பெண்களை முதன்முதலாகச் சேர்த்து புரட்சி செய்தார். 'ரத்தத்தைக் கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன்’ என முழங்கியவர், காந்தியோடு பல்வேறு விஷயங்களில் முரண்பட்டாலும், அவரை பெரிதும் மதித்தார். 'தேசப் பிதா’ என காந்தியை முதன் முதலில் அழைத்தவர் நேதாஜியே. காந்தியும், 'தேச பக்தர்களின் தேச பக்தர்’ என நேதாஜியை உணர்வு பொங்க அழைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...

  *💫EMIS-III TERM MARK ENTRY... *📝மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை... ...