கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டை நிரப்ப நடவடிக்கை

முதுகலை ஆசிரியர் தேர்வில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில், தமிழ் வழி இடஒதுக்கீட்டை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை எடுத்துள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில், சமீபத்தில், 2,300 முதுகலை ஆசிரியர்களை, டி.ஆர்.பி., தேர்வு செய்தது. இவர்கள் அனைவரும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தேர்வில், தாவரவியல் பிரிவிற்கான ஆசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும், தமிழ் வழிக்கான, 20 சதவீத இட ஒதுக்கீடும் நிரப்பப்படவில்லை.
இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறியதாவது: தாவரவியல் பிரிவில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழ்வழி இடஒதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்பவும், பணிகள் நடந்து வருகின்றன. முதுகலை பட்டப் படிப்புடன், பி.எட்., படிப்பை, தமிழ் வழியில் படித்தவர்கள், தமிழ்வழி இட ஒதுக்கீட்டின் கீழ், தேர்வு செய்யப்படுவர்.
வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் மட்டுமே, தமிழ்வழி படிப்புகள் உள்ளன. எனினும், எந்தெந்த பல்கலை, கல்லூரிகளில், தமிழ் வழி பாடப்பிரிவுகள் உள்ளன என்ற விவரங்களை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை மற்றும் உயர்கல்வித் துறையிடம் கேட்டுள்ளோம்; பதில் வரவில்லை. வந்ததும், தமிழ் வழி இட ஒதுக்கீட்டை நிரப்பும் பணி, வேகம் பிடிக்கும்.
மூன்று பாடங்களிலும், 120 இடங்கள் நிரப்பப்படும். பிப்ரவரி இறுதிக்குள், தாவரவியல் மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியலை, வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...