கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கார்ல் பென்ஸ்...

 
பெட்ரோலால் இயங்கும் காருக்கு இன்றுதான் (ஜன.29, 1886) பென்ஸ் காப்புரிமை பெற்றார். கார்ல் பென்ஸ்... பெட்ரோலில் இயங்கும் காரை முதன்முதலில் உருவாக்கியவர் என்கிற பெருமையைப் பெற்றவர் . அடிப்படையில் இவர் அப்பா ஊர்திகள் சார்ந்த பொறியியலில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு ரயில் விபத்தில் இவரின் இரண்டாம் வயதில் மரணமடைந்து விட, இவரின் அம்மா இவரை வளர்த்தெடுத்தார்.

இவர் மெக்கானிக்கல் துறையில் பட்டம் பெற்றபின் பல்வேறு கம்பெனிகளில் வேலை பார்த்தார். பின் தானே வொர்க்ஷாப் நடத்தினார். அதில் பங்குதாரர் ஏமாற்ற, இவர் மனைவி பெர்த்தாவின் சொத்துகள் முழுக்க அக்கடனை அடைக்கவே போனது. பின்னர் பல்வேறு ஆட்டோமொபைல் இன்ஜின்களை உருவாக்கும் நிறுவனத்தை உருவாக்கினார்.

இரண்டு ஸ்ட்ரோக் பெட்ரோலிய இன்ஜினை உருவாக்கினார். அதீத உழைப்புக்கு பின் நான்கு ஸ்ட்ரோக் பெட்ரோலில் இயங்கும் காரை பேடன்ட் செய்தார்; மரத்தாலான டயர்கள் பயன்படுத்தப்பட்டன. பெட்ரோல் தட்டுப்பாடு வேறு இருந்தது. பார்மசிகளில் இருந்து வாங்கித்தான் மக்கள் பயன்படுத்தினார்கள். ஒரே ஒரு கியர் இருந்ததால் மலைகளில் ஏறுவது கடினமாக இருந்தது. இவர் மனைவி காரில் ப்ரேக் லைனிங் சேர்த்துகொண்டார். கூடவே ஒரு ஷு தைப்பவரிடம் சொல்லி ப்ரேக் ப்ளாக்களில் லேதரை சேர்த்து தைக்க சொன்னார். ரெடியான காரில் இரண்டு பிள்ளைகளோடு இருநூறு மைல் பயணம் போய் மீண்டும் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார். அது இக்காரை பிரபலப்படுத்தியது. இதனாலேயே இன்னுமொரு கியரை சேர்த்து காரை மலைகளிலும் ஓட்டுகிற மாதிரி மாற்றினார் பென்ஸ்.

சில வருடங்களுக்கு பின் பொருளாதார மந்தநிலை காரணமாக டையாம்லர் பென்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்தன. அப்போதிலிருந்து இன்றைக்கு பார்க்கும் மூன்று நட்சத்திர முத்திரை உருவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையங்கள்...

 தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையங்கள் - Industrial Training Institutions Admission Fecilitation Centers... ITI Admission Facilitation ...