கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்..!

 
ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். மதுரையில் பிறந்து வளர்ந்து வெளிநாடு போகப் போகிறோம் என்ற எண்ணத்தில் மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் போது கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. வயதான ஒரு மனிதன் பசியில் மனித கழிவை எடுத்து உண்பதை பார்த்த காட்சி என்னை உறைய வைத்தது. அந்த நிமிடத்தில் உடனே நான் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கி அளித்தேன். சில நொடிகளில் அந்த உணவை அவர் உண்டுவிட்டு கண்ணீரின் மூலம் நன்றி தெரிவித்தார்.

எதற்காக நாம் வெளிநாடு போகப்போகிறோம்? பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழவே நான் அப்பொழுது முடிவு செய்தேன். பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் என் வேலை என்று என் மனதில் தோன்றியது. இது அட்சயா டிரஸ்ட் நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் என்பவரின் பேச்சு.

இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக 49 லட்சம் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு தன் கைகளால் சமைத்து வழங்கியிருக்கிறார். இவர் ஒரு சமையல்கலைஞர். வெளிநாட்டில் பல லட்சம் டாலர்களை சம்பாதிப்பதை துறந்துவிட்டு பசித்தவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே 2010ம் ஆண்டு சிஎன்என் டாப் டென் ஹீரோ விருது நாராயணன் கிருஷ்ணனை தேடி வந்திருக்கிறது.

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...