>>>புகுந்த வீடு செல்லும் நம் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைக்கும் வரவேற்பு.

பெண்மையின் மென்மையைப் மேன்மைப்படுத்தி, திருமண பந்தத்தில் இணைந்து புகுந்த வீடு செல்லும் நம் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைக்கும் வரவேற்பு. அங்கீகாரம்.

“மணமகளே மருமகளே வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா!!!

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் – நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும்
உங்கள் வாசலில் – புதுப்
பூ மணமும் பால் மணமும் எங்கள் வாசலில்  - (மணமகளே)

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோயில் எங்கள் வாசல்
செல்வ மகள் வாச மலர் வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல் - (மணமகளே)

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது – இங்கு
தங்க வரும் பெண்களுக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்கு குறைவிருக்காது – அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது” - (மணமகளே)

பெண்ணின் புகுந்த வீட்டைச் சேர்ந்த பெண்கள் புது மணப்பெண்ணை அவளின் குலப் பெருமையையும் சொல்லி, தங்கள் குலப் பெருமையையும் எடுத்துரைத்து வரவேற்கும் அற்புத, அழகு, இனிமைப் பாடல்.

No comments: